21 அடி உயரம்... 400 கிலோ வெயிட்... தயாராகும் ராட்சத அருவா!

By காமதேனு

பக்தர்கள் கோயில்களுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தும் ராட்சத அருவாவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

அருவா தயாரிப்பு

திருப்பாச்சேத்தியில் இரண்டு அடி முதல் 21 அடி உயரம் கொண்ட அருவா தயாரிக்கப்படுகிறது. மதுரையிலிருந்து பழைய கனரக வாகனங்களின் இரும்பு பட்டாக்களை வாங்கி வந்து பட்டறையில் நெருப்பில் இட்டு தட்டி தட்டி அருவா தயாரிக்கின்றனர். ராட்சத அருவாவின் எடையைப் பொறுத்து வேலை செய்யும் நாட்கள் அதிகரிக்கும், அருவா தயாரித்த பின் அதனை சிமெண்ட் தூணில் நிலை நிறுத்த வசதியாகக் கீழ்புறமும் மேற்புறமும் தனித்தனி துளைகள் இடுகின்றனர். அருவாவின் உட்புறம் மணிகளும் கட்டப்படுகின்றன.

நேர்த்திக்கடன் அருவா

திருப்பாச்சேத்தியில் உள்ள அருவா பட்டறையில் கட்டனூரில் கட்டப்பட்டு வரும் கருப்புசாமி கோயிலுக்காக 400 கிலோ எடையிலும் 21 அடி உயரத்திலும் ராட்சத அருவா தயாரிக்கப்படுகிறது. கடந்த 15 நாட்களாக மூன்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து இந்த அருவாவைத் தயாரித்துள்ளனர். தயாரிப்பாளர் விஜயகுமார் கூறுகையில் ராட்சத அருவா பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. தனித்தனி இரும்பு தகடுகள் வாங்கியும் ஒரே தகடு கொண்டும் அருவா தயாரிக்கப்படுகிறது. மற்ற அருவாக்களைக் காட்டிலும் நேர்த்திக்கடன் அருவா தயாரிப்பதில் வேலைப்பளு அதிகம்.

இந்த அருவா 21 அடி உயரம், 400 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. கனரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு கிரேன் மூலம் நிலை நிறுத்தப்பட உள்ளது. மாசி மாதங்களில் சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் அதிகளவு நேர்த்திக்கடன் அருவா வாங்கி செல்வடு வழக்கம் என்றார்.

ராட்சத அருவா தயாரிக்கப்பட்டு வருவதை அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் பலரும் வேடிக்கை பார்த்தபடியே சென்று வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


ஐந்து பேரை காவு வாங்கிய ஐயப்ப பக்தர்கள் பேருந்து... ஆட்டோ மீது மோதியதில் மேலும் பலர் படுகாயம்!

ஒரே நாளில் ரூ.192 கோடி வருமானம்: பத்திரப்பதிவுத்துறை தகவல்

கருகலைப்புக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: மருத்துவர் மீது வழக்குப்பதிவு

ஆம்னி பேருந்து- லாரி மோதி விபத்து: 2 ஓட்டுநர்களும் உயிரிழப்பு! உயிர் தப்பிய பயணிகள்

சரியும் தாவணி... மயக்கும் கண்கள்... அதிதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE