விரக்தியில் வேட்பாளர்கள்... அமித்ஷாவின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் 2வது முறையாக ரத்து!

By காமதேனு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாட்டிற்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அவரது வருகை இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இன்று ஏப்ரல் 4ம் தேதியும், நாளையும் தமிழகத்தில் மத்திய அமைச்சர் பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உடல் நலக் குறைபாடு காரணமாக திடீரென அமித்ஷாவின் பயணத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பாஜக

இதைத் தொடர்ந்து மீண்டும் இன்று இரவு மதுரை வரும் அமைச்சர் அமித்ஷா, சிவகங்கை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி மதுரை உள்ளிட்ட இந்த மூன்று மாவட்டங்களிலும் ட்ரோன்கள் பறக்க விடுவதற்கு போலீஸார் தடை விதித்திருந்தனர். மேலும் பாதுகாப்பு ஒத்திகைகளையும் போலீஸார் மேற்கொண்டிருந்தனர்.

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா

இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வட மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு மற்றும் சொந்த உடல் நிலை காரணமாக இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் சில நாட்களே மீதம் உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சியினரின் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. இந்நிலையில், அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பிறகு அடுத்தடுத்து அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பாஜக வேட்பாளர்கள் விரக்தியடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

கார் விபத்தில் சிக்கிய அஜித்... ’விடாமுயற்சி’க்காக உயிரை பணயம் வைத்து ரிஸ்க்; வைரல் வீடியோ!

சமுதாயத்தில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான்... இயக்குநர் ஹரி பரபர பேச்சு!

ஜஸ்ட் மிஸ்... பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்த தேமுதிக வேட்பாளர்!

விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!

மனைவி டார்ச்சர் தாங்கல... விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மாஸ்டர் செஃப் பிரபலம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE