சமூகநீதி குறித்து பேச திமுகவுக்கு தகுதி இருக்கிறதா? - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேச்சு!

By காமதேனு

ஏதோ முதல் முறை பாமகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளது போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். சமூக நீதி குறித்து பேச திமுகவுக்கு தகுதி இருக்கிறதா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்

கிருஷ்ணகிரியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ” பாமக தயவில் தான் அதிமுக ஆட்சியில் இருந்தது. எடப்பாடி பழனிசாமி பாமகவை துரோகி எனக் கூறுகிறார். யார் துரோகி என்பது மக்களுக்கு தெரியும். அவரை வழி நடத்திய அனைவருக்கும் துரோகம் செய்துதான், எடப்பாடி பழனிசாமி இந்த பதவிக்கு வந்துள்ளார். பாமகவின் தயவு இருந்ததால் தான் அவர் இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்” என்றார்.

கிருஷ்ணகிரி பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

மேலும், ”கடந்த தேர்தலில் கொடுக்கும் தொகுதியை ஏற்றுக்கொண்டால் 10.5% இட ஒதுக்கீடு கொடுப்பதாக கூறினர். எங்களுக்கு தொகுதிகளை வேண்டாம். இட ஒதுக்கீடு கொடுங்கள், வெற்று பத்திரத்தில் கூட கையெழுத்து போட்டு தருகிறோம் என பாமக தலைவர் ராமதாஸ் கூறினார். ஆனால் கடைசியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார்.

கிருஷ்ணகிரி பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

தொடர்ந்து பேசிய அவர், ”பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உடன் பலமுறை கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளது. ஆனால் ஏதோ முதல் முறை பாமகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளது போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். சமூக நீதி குறித்து பேச திமுகவுக்கு தகுதி இருக்கிறதா? தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE