அமித் ஷா தன்னை சந்திக்க நேரம் ஒதுக்காததால் ஆவேசமடைந்த கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கே.எஸ்.ஈஸ்வரப்பா, பாஜக வேட்பாளருக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், மாநில பாஜக மூத்த தலைவருமாக விளங்குபவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்ற இவர், ஏமாற்றத்துடன் நேற்று திரும்பினார். மாநில பாஜக தலைமைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஈஸ்வரப்பாவை சந்திக்க டெல்லியில் அமித் ஷா அவருக்கு நேரம் ஒதுக்கவில்லையாம். இதனால் டெல்லியிலிருந்து திரும்பிய வேகத்தில் பாஜக வேட்பாளருக்கு எதிராகவே சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இதன்படி ஷிவமொகா மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வரான பிஎஸ்.எடியூரப்பாவின் மகனும் தற்போதைய எம்பியுமான பி.ஒய்.ராகவேந்திராவை எதிர்த்து தான் போட்டியிடப் போவதை ஈஸ்வரப்பா உறுதி செய்திருக்கிறார். மேலும் தனது நிபந்தனைகளுக்கு தீர்வு காணப்படாதவரை மத்தியஸ்தர்களுடன் பேச்சு வார்த்தை இல்லை என்றும் அறிவித்திருக்கிறார்
மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திராவை தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே ஷிவமொகாவில் போட்டியிடும் முடிவை வாபஸ் பெறுவதாக அவர் நிபந்தனை விதித்துள்ளார். பி.எஸ்.எடியூரப்பா மற்றும் குடும்பத்தினரை தாக்கி, "ஒரு குடும்பம் மாநில பாஜகவின் அதிகாரத்தை வைத்திருக்கிறது. இது இந்து காரியகர்த்தாக்கள் மற்றும் பாஜக தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது" என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.
ஈஸ்வரப்பாவின் கலகக்குரல், காங்கிரஸ் கட்சி மீதான பாஜகவின் குற்றச்சாட்டுகளை முனைமழுங்கச் செய்திருக்கிறது. அந்தளவுக்கு காங்கிரஸ் மீதான பாஜகவின் குற்றச்சாட்டுகளை, பாஜகவுக்கு உள்ளேயே ஈஸ்வரப்பா எதிரொலித்து வருகிறார் “காங்கிரஸின் குடும்பக் கலாச்சாரத்தை பிரதமர் மோடி அடிக்கடி தாக்கி வருகிறார். ஆனால் கர்நாடக பாஜகவில் அதே போன்ற குடும்ப கலாச்சாரத்தை எப்படி அனுமதிக்கிறார்கள்? தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், அந்தக் குடும்பத்திடம் இருந்து எப்போது கட்சியை விடுவிப்பார்கள்?'' என்று ஈஸ்வரப்பா கேள்விகளை எழுப்பி வருகிறார்.
தன்னைப்போன்று இந்துத்துவா சித்தாந்தத்திற்காகவும், அமைப்புக்காகவும் போராடியவர்களின் பணி மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். மேலும் தனக்கு அரசியல் எதிர்காலம் கிடைக்காவிட்டாலும், கட்சியை தூய்மைப்படுத்துவதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை எனவும் அறிவித்திருக்கிறார்.
கர்நாடகாவின் 28 தொகுதிகளுக்கு, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இவற்றில் மே 7-ம் தேதி ஷிவமொகா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில்தான் மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திராவை எதிர்த்து ஈஸ்வரப்பா களம்காண இருக்கிறார்.
இதையும் வாசிக்கலாமே...
குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!
சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!
வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!