மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி... எக்ஸ் தளத்தில் மு.க.ஸ்டாலின் ஏகத்துக்கும் தாக்கு!

By காமதேனு

மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி நடக்கிறது என திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் மோடியின் புதிய இந்தியா டிஜிட்டல் வழிப்பறி என கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார். இது பற்றி அவர் தனது பதிவில், 'ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?

சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள். சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?

இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களாக பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையே மிகக் கடுமையான கருத்து மோதல்கள் நடைபெற்று வருகிறது. கச்சத்தீவில் ஆரம்பித்து தற்போது டிஜிட்டல் இந்தியா வரை இந்த கருத்து மோதல் தொடர்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

கார் விபத்தில் சிக்கிய அஜித்... ’விடாமுயற்சி’க்காக உயிரை பணயம் வைத்து ரிஸ்க்; வைரல் வீடியோ!

சமுதாயத்தில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான்... இயக்குநர் ஹரி பரபர பேச்சு!

ஜஸ்ட் மிஸ்... பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்த தேமுதிக வேட்பாளர்!

விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!

மனைவி டார்ச்சர் தாங்கல... விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மாஸ்டர் செஃப் பிரபலம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE