பகத் சிங்கின் 117-வது பிறந்த நாள்: செங்கல்பட்டில் பல்வேறு அமைப்பினர் மரியாதை

By KU BUREAU

கூடுவாஞ்சேரி: பகத் சிங்கின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்தியாவின் சுதந்திர போராட்ட மாவீரன், 22 வயதில் தூக்கு கயிற்றை முத்தமிட்டு வீர மரணமடைந்து இளைஞர்கள் மத்தியில் சுதந்திர தாகத்தை உண்டாக்கிய இளைஞர்களின் நாயகன் பகத்சிங்கின் 117-வது பிறந்தநாள் இன்று இந்திய முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்திலும் பல இடங்களில் பகத்சிங்கின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பகத்சிங் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கூடுவாஞ்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) சார்பில் பேருந்து நிறுத்தம் அருகே புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட தலைவர் சி. ராஜேஷ் குமார் தலைமையில் பகத் சிங்கின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதில், மாவட்டச் செயலாளர் சொ.இரணியப்பன், மாநில குழு உறுப்பினர் உ.அதியமான், ஒன்றிய செயலாளர் ம.பாலாஜி கூடுவாஞ்சேரி நகரச் செயலாளர் மு.தினேஷ் குமார், மாவட்டக் குழு உறுப்பினர் பிலால், புரட்சிகர இளைஞர் கழகத்தின் மு.ராஜேஷ், நகர்க் குழு உறுப்பினர் சு. செங்குட்டுவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE