பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைப்போல தமிழக முதலமைச்சரால் ரோடு ஷோ செல்ல இயலுமா என்று அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அடிக்கடி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு ஊர்களிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அவ்வபோது அவர் ரோடு ஷோ நடத்தி பாஜக வேட்பாளர்களுக்காக மக்களிடையே வாக்கு சேகரிக்கிறார். இது பாஜகவினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மோடி அடிக்கடி தமிழகம் வருவது குறித்து திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
எத்தனை முறை பிரதமர் தமிழகம் வந்தாலும், ரோடு ஷோ நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என்று விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மற்றும் அமித்ஷா ஆகியோரைப் போல தமிழ்நாடு முதலமைச்சரால் ரோடு ஷோ செல்ல இயலுமா? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பிரதமர் மற்றும் அமித்ஷா ஆகியோரைப் போல ரோடு ஷோ நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் பயப்படுவது ஏன்? முதலமைச்சர் ரோடு ஷோ நடத்தினால் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்து விடும்" என்று சவால் விடுத்தார்.
மேலும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காததற்கு பாஜக தான் காரணம் என்று சீமான் விமர்சித்துள்ளதற்கு பதிலளித்து பேசுகையில். "சரியான நேரத்தில் சின்னத்தை விண்ணப்பித்து கேட்டு பெறாததால் நாம் தமிழர் கட்சியினர் அவர் மீது கோபமாக இருக்கிறார்கள். தன் மீதான தவறை மறைக்க தினம் ஒரு வார்த்தையை, தினம் ஒரு தத்துவம் என சீமான் பேசிக் கொண்டிருக்கிறார்" என்று கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!
கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!
வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!