கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலை உணவுத் திட்டம், கடந்த 2022ம் ஆண்டு செப்.15ம் தேதி தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். மதுரையில் அண்ணாவின் பிறந்த நாளில், இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 31,000 அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்திற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த திட்டம் தெலங்கானா மாநிலத்திலும் நடைமுறையில் உள்ளது.
இந்தக் காலை உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் புகழடைந்து வருகின்ற நிலையில், இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது எக்ஸ் தளத்தில், 'கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம்' எனப் பதிவிட்டுள்ளார்.
இதனை திமுக வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நடைமுறைப் படுத்தப்படுவது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும்' என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!
முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!
‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்
காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?