குமரி கனிம திட்ட எதிர்ப்பு போராட்டப் பின்னணியில் மத தலைவர்களா? - ராஜேஷ் குமார் எம்எல்ஏ விளக்கம்

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரையோர பகுதி மணலில் இருந்து கனிமம் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரும் போராட்டத்தின் பின்னணியில் மத தலைவர்கள் இல்லை என ராஜேஷ் குமார் எம்எல்ஏ கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்த ராஜேஸ் குமார் அதம் பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மணவாளக்குறிச்சி அரிய வகை மணல் ஆலை நிறுவன பிரச்சினை தொடர்பாக தாங்கள் குமரி மாவட்ட ஆட்சியரிடம் விவாதித்தோம். அப்போது அவர் எங்களுக்கு உத்தரவாதம் தந்துள்ளார். எந்தச் சூழ்நிலையிலும் மக்களின் கருத்துக்களை உள்வாங்காமல் எந்த நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்ற உறுதியைத் தந்துள்ளார்.

நாங்களும் சில விஷயங்களை அவரது கவனத்திற்கு கொண்டு வந்தோம். கனிம வளம் எடுக்கும் திட்டத்திற்கு எதிரான போராட்ட பின்னணியில் மத தலைவர்கள் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. அப்படி யாரும் இல்லை. அனைத்து தரப்பினரும் இந்த திட்டத்தால் பாதிக்கப்படுவார்கள்" என்று ராஜேஸ்குமார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE