பொதுக்குழு கூட்டத்திற்கு வீல் சேரில் வந்த விஜயகாந்த்: தொண்டர்கள் கண்ணீர்!

By காமதேனு

சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தேமுதிகவின் 8வது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டார். முன்னதாக வீல் சேரில் விழா மேடைக்கு வந்த அவரை நிர்வாகிகள் கண்ணீர் மல்க கைதட்டி வரவேற்றனர்.

பொதுக்குழுவில் கலந்து கொண்ட விஜயகாந்த்.

கடந்த மாதம் 18-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. அப்போதே அதனை பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக மறுத்து வந்தார். இதனையடுத்து அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

விஜயகாந்த்

இந்த நிலையில் அவர் இன்று நடைபெறும் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக முழுவதும் இருந்து தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், விஜயகாந்த் ரசிகர்கள் சென்னையை நோக்கி படையெடுத்தால் திருவேற்காடு பகுதியே விழாக் கோலம் பூண்டது. சரியாக 12 மணிக்கு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள விஜயகாந்த வந்த போது, அவரது காரை மறித்து 'கேப்டன் வாழ்க, எங்கள் உயிர் நாடியே' என கண்ணீர் மல்க கோஷமிட்டனர்.

பொதுக்குழுவில் பங்கேற்ற பிரேமலதா

இதனைத் தொடர்ந்து பொதுக்குழு மேடைக்கு வீல் சேரில் உதவியாளர்கள் அவரை அழைத்து வந்தனர். அப்போது பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களைப் பார்த்து விஜயகாந்த் கையசைத்தார். இதனிடையே தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜய்காந்த் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

பிரபல நகைச்சுவை நடிகர் கடத்திக் கொலை!

கடும் பனிப்பொழிவு... சிக்கித் தவித்த 800 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

அதிர்ச்சி...புழல் சிறையில் இருந்து பெண் கைதி எஸ்கேப்: 2 வார்டன்கள் சஸ்பெண்ட்!

'அவளுடன் விஷம் குடித்து விட்டேன் அம்மா';போனில் கதறிய மகன்: காதலர்கள் பலியான சோகம்!

தனி அறையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியர் சஸ்பெண்ட்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE