”பொதுமக்கள் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல” பாஜகவின் ‘வரி பயங்கரவாத'த்துக்கு எதிராக சீறும் சித்தராமையா

By காமதேனு

பாஜகவின் வரி பயங்கரவாதத்துக்கு (டேக்ஸ் டெரரிஸம்) காங்கிரஸ் பயப்படாது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக முதல்வருமான சித்தராமையா பதிலடி தந்துள்ளார்.

”’வரி பயங்கரவாதம்’ என்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியை மிரட்ட முடியும் என்று பாஜக நினைத்தால் அது தவறாகிப் போகும்” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜகவுக்கு எதிரான தாக்குதலாக இன்று தெரிவித்துள்ளார். மேலும் ரூ1,823 கோடி செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை அனுப்பிய புதிய நோட்டீஸ் தொடர்பாக சித்தராமையா கடுமையாக பதிலளித்தார். மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என பாஜக பயப்படுவதாகவும், எனவே மத்திய விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துகிறது எனவும் குற்றம் சாட்டினார்.

வருமான வரித்துறை

“வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஏற்படப்போகும் தோல்வியைக் கண்டு பாஜக அஞ்சுகிறது. அதனால் காங்கிரஸ் கட்சியைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியாக அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற தன்னாட்சி அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகிறது. இந்த உபாயத்தின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சி மீது 'வரி பயங்கரவாதத்தை' கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. எங்கள் கட்சியை பலவீனப்படுத்தினால் தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்ற மாயையில் பாஜக உள்ளது” என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வருமான வரித்துறை அளவுகோல்களை பாஜக மீது பிரயேகித்தால், கடந்த ஏழு ஆண்டுகளில் வரி முரண்பாடுகளுக்காக பாஜக ரூ4,263 கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் சித்தராமையா சாடினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் திரிணமூல், சிபிஐ உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் எதிராக 'வரி பயங்கரவாதத்தை' ஒரு கருவியாக வருமான வரித்துறை பயன்படுத்த தூண்டப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அமலாக்கத்துறை

”பாஜக தனது மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி பலதரப்பினரையும் மிரட்டி பல்லாயிரம் கோடி நிதியை சேகரித்துள்ளது. எதிர்க்கட்சிகளை ஆக்ரோஷமாக குறிவைக்கும் வருமான வரித்துறை, பாஜகவின் வரி விதிப்பு மீறல்களுக்கு மர்மமான முறையில் கண்ணைக் மூடிக்கொள்கிறது; ஆனால், அதன் கண்களைக் கட்டுவது யார் என்று கேள்வி கேட்க முடியாத அளவுக்கு பொதுமக்கள் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல” என்று முதல்வர் சித்தராமையா சாடியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE