வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
சினிமா, அரசியல் என இரண்டு தளங்களிலும் இயங்கி வருபவர் மன்சூர் அலிகான். சில ஆண்டுகள் நாம் தமிழர் கட்சியியில் பயணித்து வந்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி கடந்தமாதம் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தையிலும் மன்சூர் அலிகான் ஈடுபட்டார். அதில் உடன்பாடு ஏற்படாததால், தனித்து சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இந்த மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். அவரது வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகுதி மக்களிடையே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அனல் பறக்கும் தேர்தல் களத்தை, அவ்வப்போது சரவெடியாக பேசி கலகலப்பாக்கி வருகிறார் மன்சூர் அலிகான். இந்திய ஜனநாயக கட்சி தொடங்கி ஒரு மாதமே ஆன நிலையில், தனக்கு கிரிக்கெட் பேட், பலாப்பழம், லாரி சின்னங்களில் ஏதாவது ஒன்றை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் மன்சூர் அலிகான் விண்ணப்பித்திருந்தார்.
சமீபத்தில், சின்னம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கிரிக்கெட் பேட், பலாப்பழம், லாரி சின்னங்களை கேட்டு இருக்கிறேன். பலாப்பழம் சின்னம் கிடைத்தால் தலையில் பலாப்பழத்தை வைத்துக் கொண்டு வீதி வீதியாக பொதுமக்களிடம் ஓட்டு பிச்சை கேட்பேன். 10 ஆண்டுகள் ஆண்ட பிரதமர் மோடியே, குனிந்து குனிந்து ஓட்டுப் பிச்சை கேட்கிறார். நானெல்லாம் எம்மாத்திரம்"என்று கலகலப்பாக பேசியிருந்தார்.
இந்நிலையில், அவர் விருப்பப்பட்டது போல மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் இன்று ஒதுக்கியுள்ளது. அதேபோல, ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்சுக்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னத்தையும், விசிக கட்சிக்கு பானை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!
கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!
பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!
மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!