நீங்க அப்படிக்கா போங்க; நாங்க இப்படிக்கா போறோம்... போட்டி வேட்பாளரைக் கண்டதும் திண்டுக்கல் சீனிவாசனின் கலகல பேச்சு!

By காமதேனு

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எதிரில் வந்த சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்தை கண்டதும், நகைச்சுவையாக பேசியது இரு கட்சியினரிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சச்சிதானந்தம் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இதேபோல் அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் முகமது முபாரக் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

எதிரெதிரே சந்தித்துக் கொண்ட அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள்

இன்று காலை முதல் திண்டுக்கல் நகர் பகுதிகளில் இரண்டு கூட்டணிகளையும் சேர்ந்த கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நகர் பகுதியில் திடீரென இரண்டு பேரும் ஒரே வீதியில் எதிரெதிரே சந்திக்க நேரிட்டது. அப்போது உடனே மைக்கை பிடித்து பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ”எம்ஜிஆர், நம்பியார் மாதிரி உங்க வீரத்தை இங்கே காட்ட வேண்டாம். ஒதுங்கி போங்க” என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் வாக்கு சேகரிப்பு

மேலும் எதிரில் வாகனத்தில் வந்த சச்சிதானந்தத்தை கண்டதும், ”நல்வாழ்த்துக்கள், நல்வாழ்த்துகள். நமக்குள் சண்டைகள் வேண்டாம். ஒதுங்கிப் போவோம். ஓட்டு கேப்போம். மக்கள் தீர்ப்பு வழங்கட்டும். வாழ்த்துக்கள்” என்று பேசினார். இதை, கண்டதும் இருதரப்பு வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சிறிது நேரம் சிரிப்பலையில் ஆழ்ந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு!

நடுக்கடலில் பரபரப்பு... கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்த இந்திய கடற்படை!

கோயில் திருவிழாவில் அதிர்ச்சி... தேர்ச்சக்கரத்தில் சிக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி!

46 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துங்கள்... வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE