அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

By காமதேனு

கடலூரில் தங்கர்பச்சானை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்ட நிலையில், பாஜகவினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் கடலூர் தொகுதியில் இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதற்காக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கடலூருக்கு இன்று வருகை தந்தார்.

பாமக வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து அண்ணாமலை கடலூரில் பிரச்சாரம்

கடலூரில் உள்ள முதுநகர் பகுதியில் கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களிடையே அவர் தங்கர்பச்சானுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மத்திய அரசின் சாதனைகளை முன்வைத்து பேசிய அண்ணாமலை, தங்கர்பச்சானை வெற்றியடைய செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். மேலும், பிரதமர் கூறிய 400 எம்.பி.,க்களில் தங்கர்பச்சானும் ஒருவர் என தெரிவித்தார்.

இரு தரப்பினரிடையேயான மோதல் குறித்து 4 பேரிடம் போலீஸார் விசாரணை

இதனிடையே கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பாஜகவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், முண்டியடித்து அண்ணாமலையின் முன்பாக நிற்க முயற்சி செய்தனர். அப்போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கூட்டத்தில் நின்றிருந்த இரு தரப்பு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதனைக் கண்ட போலீஸார், உடனடியாக அவர்களைத் தடுத்து சமாதானப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக நான்கு பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் பிரசாரக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு!

நடுக்கடலில் பரபரப்பு... கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்த இந்திய கடற்படை!

கோயில் திருவிழாவில் அதிர்ச்சி... தேர்ச்சக்கரத்தில் சிக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி!

46 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துங்கள்... வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE