ஒற்றை வரியில் காலி பண்ணிட்டாரே... சசிகலா காலில் விழுந்தது குறித்து பேசிய இபிஎஸ்!

By காமதேனு

சசிகலா காலில் விழுந்தது குறித்த விமர்சனத்திற்கு, பெரியவர்கள் காலில் விழுவது தப்பா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து, அது குறித்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனுக்காக மதுரை கே.கே.நகரில் தேர்தல் பணிமனை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக வேட்பாளர் டாக்டர்.சரவணன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, "மக்களவைத் தேர்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணி ஏற்பட்டதை அடுத்து நிர்வாகிகள் தொண்டர்கள் எழுச்சியோடு செயல்பட்டு வருகிறார்கள். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் ஒரே அலை தான் வீசுகிறது. அது அதிமுக அலையாக வீசுகிறது ” என்றார்.

அதிமுக பணிமனையை திறந்து வைத்த இபிஎஸ்

மேலும், “அதிமுக கள்ளக்கூட்டணி வைத்துள்ளது என முதலமைச்சர் விமர்சனம் செய்வதற்கு அவரே விளக்கம் அளிக்க வேண்டும். இப்படி எல்லாம் யாரும் விமர்சனம் செய்ததே இல்லை. ஒவ்வொரு தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படுகிறது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது அவதூறு பரப்பி வருகின்றனர். தோல்வி பயத்தின் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அதிமுகவை அவதூறாக பேசி வருகிறார்கள்” என்றார்.

சசிகலா காலில் விழுந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “ஏன் பெரியவர்கள் காலில் விழுவது தப்பா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமரை எதிர்ப்பது போல் வெளியில் வீரவசனம் பேசி வருகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருப்புக்குடை பிடித்தால் பிரதமர் கோபித்துக் கொள்வார் என வெள்ளைக்கொடை பிடிக்கிறார். தமிழ்நாட்டில் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அமைச்சர் உதயநிதி ஓடோடி சென்று பிரதமரை அழைத்து வருகிறார். பிரதமர் இடத்தில் சரணாகதி அடைந்து விட்டு, வெளியே பிரதமரை எதிர்ப்பது போல் இரட்டை விடும் போடுகிறார்கள்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE