கன்னியாகுமரியில் திடீரென வெடித்து சிதறிய பாறைகள்... பருவநிலை மாற்றம் காரணமா?

By சிவசங்கரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாறைகள் வெடித்து சிதறிய நிகழ்வு சுற்றுவட்டாரப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம், மலையோர பகுதியான பத்துகாணி மலைப்பகுதியில் இன்று காலை திடீரென பாறைகள் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வெளியே சென்று பார்த்த போது, மலைக்கு மேல் புகைமண்டலமாக காட்சியளித்துள்ளது. மேலும் உயரமான மலைப்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டு கீழ் நோக்கி வந்துள்ளது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினரும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

பத்துகாணி மலைப்பகுதி

இது தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் வெப்பநிலை அதிகரிப்பால் பாறைகள் வெடித்து சிதறியிருக்கலாம். பருவ நிலை மாற்றத்தினால் கூட இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். இதனால் அச்சமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள், இதே நிலை நீடித்தால் பாறைகள் உடைந்து குடியிருப்பு வீடுகளின் மேல் விழும் நிலை உள்ளதாக கவலை தெரிவித்தனர். எனவே அரசு இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, குடியிருப்புவாசிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE