திண்டுக்கல் பாமக வேட்பாளர் திலகபாமா காரை தடுத்து தகராறு... மாவட்டச் செயலாளரின் பதவி பறிப்பு!

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமாவுடன் அக்கட்சியைச் சேர்ந்த ஜோதிமுத்து தகராறு செய்ததாக கூறி அவரது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

திண்டுக்கல் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் ஜோதிமுத்து. இவர் கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார். தற்போது இவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அக்கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடுகிறார்.

தொகுதிக்குள் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பைத் தொடர்ந்து சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றுவருகிறது. ஒட்டன்சத்திரத்தில் இரு தினங்களுக்கு முன்பு பாஜக, பாமக மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா

இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்திருந்தனர். கூட்டம் முடிந்தநிலையில் உணவு வந்துசேர தாமதமானது. அதற்குள் வேட்பாளர் திலகபாமா அங்கிருந்த காரில் புறப்பட்டார். நான் ஏற்பாடு செய்கிறேன் என்றால் கேட்கவில்லை. நீங்களே உணவு ஏற்பாடு செய்துகொள்கிறீர்கள் எனச் சொல்லிவிட்டு தற்போது வந்தவர்களுக்கு உணவு கொடுக்கமுடியவில்லை. அதற்குள் புறப்பட்டு செல்கிறீர்களே என ஜோதிமுத்து, வேட்பாளர் திலகபாமாவிடம் கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த திலகபாமா, எனக்கு முக்கிய வேலை உள்ளது என்று கூறிவிட்டு செல்ல முயன்றார். அப்போது காரை மறித்து வந்தவர்களுக்கு உணவு வந்தவுடன் செல்லுங்கள் என ஜோதிமுத்து கூறியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் காத்திராமல் உடனடியாக அங்கிருந்து திலகபாமா புறப்பட்டுச்சென்றார். நடந்த நிகழ்வுகள் குறித்து, ஒரு பெண் என்றும் பாராமல் காரை மறித்து மாவட்டச் செயலாளர் ஜோதிமுத்து அனைவரின் மத்தியில் தகராறில் ஈடுபட்டார் என பாமக தலைமைக்கு வேட்பாளர் திலகபாமா புகார் செய்துள்ளார்.

இதன் விளைவாக உடனடியாக ஜோதிமுத்து மாவட்டச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இதை அறியாத ஜோதிமுத்து, நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் நடந்த வேட்பாளர் அறிமுகக்கூட்டத்திலும் பங்கேற்றார். பின்னர் தான் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது அவருக்கே தெரியவந்தது. இதையடுத்து நத்தத்தில் நேற்று நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் ஜோதிமுத்து பங்கேற்கவில்லை.

நீக்கப்பட்ட நிர்வாகி ஜோதிமுத்து

இதுகுறித்து ஜோதிமுத்து கூறுகையில்,"வேட்பாளர் திலகபாமா கட்சி நிர்வாகிகளை கலந்தாலோசிக்காமல் அவராகவே தனித்து செயல்படுகிறார். எனக்கு அவரது செயல்பாடுகள் ஒத்துவரவில்லை, எனவே, கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளேன். ஆனால், கட்சியில் தொடர்ந்து செயல்படுவேன்", என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE