தொடக்க நாளை முன்னிட்டு சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களை பொதுமக்கள் பார்வையிடலாம்: ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் அழைப்பு

By KU BUREAU

சென்னை: சிஎஸ்ஐஆர் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் தொடக்க நாளைமுன்னிட்டு அதன் ஆய்வகங் களை பொதுமக்கள் இலவசமாக நேரில் பார்வையிடலாம் என அதன் இயக்குநர் என்.ஆனந்தவல்லி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை யில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சிஎஸ்ஐஆர் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம்1942-ம் ஆண்டு செப்.26-ம் தேதிதொடங்கப்பட்டது. தொழில் துறைக்கு தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் செப்.26-ம் தேதி சிஎஸ்ஐஆர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் இளைய தலைமுறையினர், பள்ளி, கல்லூரிமாணவர்களுக்கு பயன்படும் வகையில் நாட்டில் உள்ள அனைத்து சிஎஸ்ஐஆர் ஆய்வ கங்களும் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும்.

காலை 9.30 - மதியம் 2.30: அதன்படி சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் வளாகம், சிஎஸ்ஐஆர் - சென்னை வளாகம் ஆகியவற்றை நாளை (செப். 26) காலை 9.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படும். ஆர்வமுள்ள இளைஞர்கள், பள்ளி, கல்லூரிமாணவர்கள் என அனைத்துதரப்பினரும் சிஎஸ்ஐஆர் ஆய் வகங்களை பார்வையிடலாம்.

சிஎஸ்ஐஆர் - சென்னை வளாகத்தில் மத்திய மின் வேதியியல் நிறுவனம், தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய அறிவியல் இயந்திரங்களின் அமைப்பு, தேசிய உலோகவியல் ஆய்வகம், மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் 5ஆய்வகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் தலைமையகம் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மண்டல அளவில் பல்வேறு வகையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு அவை அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல, கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையவளாகத்தில் மொத்தம் 10 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. உலக அளவில் சிக்கலான கட்டுமான ஆராய்ச்சிகள், ஒரு கட்டிடத்தின் பராமரிப்பு,நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர் களில் எதிர்கொள்வது போன்ற பலவகை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இதிலிருந்து மாணவர்கள் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தையும், அதன் பயன்பாடுகளையும் கற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE