வேலையில்லா திண்டாட்டம் பிரச்சினைக்கு தீர்வு காண இயலாது என்று கூறுவது மத்திய பாஜக அரசின் கையாலாகாத தன்மையை காட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், நாட்டில் வேலைவாய்ப்பின்மையை ஒழிக்க மத்திய அரசால் மட்டும் முடியாது என தெரிவித்திருந்தார். மேலும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பேசியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், ”வேலையில்லாமைப் பிரச்சனைக்கு அரசால் தீர்வு காண இயலாது என்று அறிவித்திருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இது பாஜக அரசின் கையாலாகாத தன்மையை காட்டுகிறது. பாஜக அரசால் இயலாது என்றால் ’நாற்காலியை காலி செய்’ என்று நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும். வேலையில்லாமைப் பிரச்சனைக்கு பல தீர்வுகள் உண்டு. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்த வழிகளை பற்றி விளக்கமாக சொல்லி இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், இது தொடர்பாக தனது கருத்தை முன் வைத்துள்ளார். “சிறு குறு தொழில் முனைவோருக்கு பதிலாக பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக்கொண்டு இருந்தால் வேலை வாய்ப்பின்மையை எப்போதுமே சரி செய்ய முடியாது” என்று அவர் விமர்சித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!
வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?