ஆம் ஆத்மியின் ஒரே ஒரு மக்களவை எம்.பியான சுஷில் ரிங்கு பாஜகவில் ஐக்கியம்... பஞ்சாப்பில் பரபரப்பு!

By வீரமணி சுந்தரசோழன்

ஆம் ஆத்மி கட்சியின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினரான சுஷில் குமார் ரிங்கு இன்று பாஜகவில் இணைந்தார். மேலும், ஜலந்தர் மேற்கு தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஷீத்தல் அங்கூரலும் பாஜகவில் இணைந்தார்.

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சிடைய செய்துள்ளது. இந்த நேரத்தில் ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில் மேலும் ஒரு அதிர்ச்சி தரக்கூடிய செய்தி வெளியாகியுள்ளது. அதாவது ஆம் ஆத்மி கட்சியின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினரான சுஷில் குமார் ரிங்கு மற்றும் ஜலந்தர் மேற்கு தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தங்காளை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்.

சுஷில் குமார் ரிங்கு, ஷீத்தல் அங்கூரல்

2023ல் ஜலந்தர் மக்களவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் சுஷில் குமார் ரிங்கு, காங்கிரஸ் வேட்பாளரான கரம்ஜித் கவுர் சவுதாரியை தோற்கடித்து மகத்தான வெற்றியைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் 543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற மக்களவையில் ஒரே ஒரு ஆம் ஆத்மி எம்.பியாக இருந்து வந்தார். அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். ரிங்கு வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் சார்பில் ஜலந்தரில் போட்டியிட உள்ளார் என சொல்லப்படுகிறது.

முன்னதாக 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ரிங்குவும், ஆம் ஆத்மி வேட்பாளராக அங்கூரலும் ஜலந்தர் மேற்கு தொகுதியில் நேருக்கு நேர் மோதினர். அப்போது ரிங்குவை வீழ்த்தி ஆம் ஆத்மி வேட்பாளரான அங்கூரல் வெற்றி பெற்றார். அதன்பின்னர் ரிங்கு 2023 இல் ஆம் ஆத்மி கட்சிக்கு மாறினார். இவர்கள் இருவருமே இப்போது கூட்டாக பாஜகவில் சேர்ந்துள்ளனர்.

பாஜகவில் இணைந்த நிகழ்ச்சி

நேற்று லூதியானா எம்.பியும், காங்கிரஸ் தலைவருமான ரவ்னீத் சிங் பிட்டுவும் பாஜகவில் இணைந்தார். பிட்டு பஞ்சாபின் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன் ஆவார். தொடர்ந்து இன்று ஆம் ஆத்மி எம்.பி மற்றும் எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்துள்ளது பஞ்சாப் அரசியலில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலின் கடைசி கட்டமான ஜூன் 1ஆம் தேதி பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இம்மாநிலத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம், பாஜக என 4 முனை போட்டி நிலவுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE