மக்களுக்கு குட் நியூஸ் வரப்போகிறது!- ரேஷன் அட்டைக்கு ரூ.5000 நிவாரண நிதி வழங்க முடிவு?

By காமதேனு

மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை நின்று சுமார் 6 நாட்களாகியும் பல இடங்களில் இன்னும் வெள்ளநீர் வடியவில்லை. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருள்கள் பழுதாகின. மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கின. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்படைந்துள்ளனர். வெள்ள நிவாரணத்துக்காக தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். முதற்கட்டமாக 5060 கோடி ரூபாய் பணம் கேட்டு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். பேரிடர் நிவாரண நிதி மூலம் 450 கோடி ரூபாயை விடுவித்த மத்திய அரசு, சென்னை வெள்ள மேலாண்மை திட்டம் மூலம் 561.29 கோடி ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள்

மத்திய அரசு வழங்கும் நிவாரணத்தை பொறுத்தே நிவாரண உதவிகள் வழங்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் மறுசீரமைப்பு, நிவாரணம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 30 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

வெள்ளபாதிப்பு

ஒவ்வொரு ரேஷன் அட்டைகளுக்கும் தலா ரூ.4000 வழங்கலாமா அல்லது ரூ.5000 வழங்கலாமா என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது சென்னையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5000 ஆயிரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் பெண்களுக்கு இலவசம்... நடைமுறைக்கு வந்தது ‘மகாலட்சுமி’ திட்டம்!

சோகம்... `முண்டாசுப்பட்டி’ படப்புகழ் நடிகர் காலமானார்!

நடிகர் விஜயகாந்துக்கு மீண்டும் தீவிர சிகிச்சை... ரசிகர்கள் அதிர்ச்சி!

இன்று தமிழகம் முழுவதும் 3000 இடங்களில் மருத்துவ முகாம்கள்!

ப்பா... ஜம்ப் சூட்டில் சூடேற்றும் அலியா பட்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE