ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

By சந்திரசேகர்

விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு எதிராக, பாஜகவை சேர்ந்த மருத்துவர் வேதா வேட்புமனு தாக்கல் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதன் மூலம் விருதுநகர் தொகுதியில் உட்கட்சி பூசல் வெளியே வந்துள்ளது.

பிரதமர் மோடியுடன் ராதிகா, சரத்குமார்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் மருத்துவர் வேதா. இவர், மதுரை மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணி செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர், விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார். தனக்குதான் விருதுநகர் தொகுதி என்ற நம்பிக்கையில், வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பாகவே பிரச்சாரத்திலும் அவர் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், பாஜகவுடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இணைந்தது. அதனால், விருதுநகர் தொகுதியை சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகாவுக்கு பாஜக ஒதுக்கியது. மாவட்டத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒரு நபரை வேட்பாளராக அறிவித்ததால், விருதுநகர் பாஜகவினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

ராதிகா சரத்குமார் வேட்புமனு தாக்கல் செய்தபோது...

இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராதிகா சரத்குமார், வேட்புமனுதாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதே தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் நடிகர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் மற்றும் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அதனால், விருதுநகர் நட்சத்திர தொகுதியாக மாறி தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பாஜக நிர்வாகி மருத்துவர் வேதா, தானும் இதே தொகுதியில் போட்டியிடுவதாக ஆட்சியர் ஜெயசீலனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இது பாஜக தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்தார் மருத்துவர் வேதா

ஏற்கெனவே பாஜகவின் வேட்பாளராக ராதிகா சரத்குமார் வேட்புமனுதாக்கல் செய்த நிலையில், பாஜகவை சேர்ந்த மருத்துவர் வேதா வேட்புமனுதாக்கல் செய்ததால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது ராதிகா சரத்குமாருக்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய மருத்துவர் வேதா, "தான் தமிழ்நாடு பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடவில்லை. டெல்லி பாஜக மோடி அணி என்ற பெயரில் போட்டியிடுகிறேன்" என்று விளக்கமளித்துள்ளார். பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு எதிராக, பாஜகவை சேர்ந்த நிர்வாகி வேட்புமனுதாக்கல் செய்த சம்பவம், விருதுநகரில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE