அரியலூர்: அரியலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட செந்துறை பகுதிகளில் ரூ.2.31 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (செப்.24) தொடங்கி வைத்தார்.
செந்துறை அடுத்த சிலுப்பனூர் கிராமத்தில் ரூ.13.57 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி, தளவாய் கூடலூர் கிராமத்தில் ரூ.18.42 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி, முல்லையூர் பழைய காலனியில் ரூ.8.77 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, துளார் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர், அசாவீரன்குடிக்காடு ஊராட்சியில் ரூ.13.56 லட்சத்தில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு கட்டிடம் கட்டுபணி, கஞ்சமலைப்பட்டி கிராமத்தில் ரூ.9.50 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, மணப்பத்தூர் கிராமத்தில் ரூ.9.50 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, ரூ.13.57 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.
அதேபோல், சித்துடையார் கிராமத்தில் ரூ.9.50 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, குழுமூர் கிராமத்தில் ரூ.9.50 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, வங்காரம் கிராமத்தில் ரூ.18.42 லட்சத்தில் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி, ரூ.9.50 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, நல்லநாயகபுரம் கிராமத்தில் ரூ.9.50 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றையும் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
» தொல்லியல் ஆய்வை வீட்டிலிருந்தே தொடங்குங்கள்: மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுறுத்தல்
» பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு: தாம்பரம் அருகே நன்மங்கலம், சித்தாலப்பாக்கத்தில் என்ஐஏ ரெய்டு
மேலும், வஞ்சினாபுரம் கிராமத்தில் ரூ.13.56 லட்சம் மதிப்பில் உணவு தானிய சேமிப்புக் கட்டிடம் கட்டும் பணி, ரூ.9.50 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, பெருமாண்டி கிராமத்தில் ரூ.32.05 லட்சம் மதிப்பில் மயான சாலையில் சிறுபாலம் அமைக்கும் பணி, நக்கம்பாடி கிராமத்தில் ரூ.9.50 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, நமங்குணம் கிராமத்தில் ரூ.13.56 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி, ரூ.9.50 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றையும் அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஷீஜா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.