ஸ்டாலின் - திருமாவளவன் திட்டமிட்டு நடத்தும் மது ஒழிப்பு மாநாடு நாடகம்: மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்

By KU BUREAU

தூத்துக்குடி: மது ஒழிப்பு மாநாடு என்பது முதல்வரும், திருமாவளவனும் திட்டமிட்டு நடத்தும் நாடகம் என, மத்தியஇணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத் தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: குஜராத்தில் சபர்மதி ஆறு, சகதிக்குள் மூழ்கி ஒன்றும் இல்லாமல் இருந்தது. ஆனால், அந்த ஆற்றில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுத்தப்படுத்தி, தற்போது அகமதாபாத் நகரின் ஜீவநதியாக அந்த ஆறு மாறியிருக்கிறது. இதுபோன்ற விஷயங்களை பிரதமர்மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டா லின் கற்றுக் கொள்ள வேண்டும். எந்தவித ஆய்வும் இல்லாமல் கூவத்தை சீரமைப்பதாக கூறி, எந்தப் பணியையும் செய்யவில்லை. அதனால்தான், கூவம் நதிக்கு ஒதுக்கிய ரூ.500 கோடி தொடர்பாக வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்று, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேட்கிறார். அதையே நானும் கேட்கிறேன்.

இலங்கையில் யார் அதிபராகவந்தாலும் நாம் சரியான உறவைகடைபிடித்துக் கொண்டிருக் கிறோம். மீனவர்களைத் தொடர்ந்து மீட்டு வருகிறோம். மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஜிபிஎஸ் கருவியைக் கொடுத்துள்ளோம். தமிழகத்துக்கு மட்டும் படகுகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்த ரூ.17 கோடி நிதி கொடுத்துள்ளோம். மது ஒழிப்பு மாநாடு என்பது,முதல்வர் ஸ்டாலினும், திருமாவளவனும் திட்டமிட்டு செயல்படுத்து கின்ற நாடகம். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு முழுமையாக சீரழிந்து கிடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE