அம்பேத்கர் படத்தை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

By காமதேனு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அடிக்கப்பட்டுள்ள போஸ்டரில் அம்பேத்கர் படம் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அந்த போஸ்டர்

‘சோனியா, கமல் படங்கள் எல்லாம் இருக்கு. ஆனா, நம்ம கட்சியோட ஆணி வேரான தலைவர் அம்பேத்கர் படம் போஸ்டரில் ஸ்டாம்ப் சைஸுக்கு கூட கிடையாது’ என்று திருமா தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் விழுப்புரத்தில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும், சிதம்பரத்தில் கட்சியின் தலைவர் திருமாவளவனும் போட்டியிடுகின்றனர்.

தற்போது அந்தந்த தொகுதிகளில் உறுப்பினர்களாக உள்ள இவர்கள் இருவரும் தங்கள் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

இன்று மாலை சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் இந்தியா கூட்டணிக் கட்சிகள் செயல் வீரர்கள் கூட்டம் அரியலூரில் நடைபெற உள்ளது. இதற்காக நோட்டீஸ் மற்றும் போஸ்டர்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதில் அம்பேத்கர் படம் இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, முகம் சுளிக்கிறார்கள் சிதம்பரம் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள்.

கூட்டணி தலைவருடன் திருமாவளவன்

இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் அரியலூரில் நடைபெற உள்ள சிதம்பரம் மக்களவைத் தொகுதி செயல்வீரர் கூட்டத்திற்கு அடிக்கப்பட்டுள்ள அந்த அழைப்புகளில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் படங்களுடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகிய காங்கிரஸ் தலைவர்களின் படங்கள், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் படங்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன.

ஆனால் அதில் அம்பேத்கர் படம் இடம் பெறவில்லை என்பதை எதிர்க்கட்சிக்காரர்களும் தங்களது பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வைரலாக்கி வருகின்றனர்.

அம்பேத்கரின் பெயரால் அரசியலுக்கு வந்து இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிற திருமாவளவன் அம்பேத்கர் படம் இல்லாமல் இப்படி போஸ்டர் அடிக்கலாமா? என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருவது சிதம்பரம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE