அமெரிக்கா சென்றார் மநீம தலைவர் கமல்ஹாசன்

By KU BUREAU

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-வது பொதுக்குழு கூட்டம்சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன், கட்சியினருக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார். கூட்டத்தில், கமல்ஹாசனை மீண்டும் தலைவராக தேர்வு செய்தது உள்ளிட்டவை தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப் பட்டன.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம்கமல்ஹாசன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டுஹவுஸ் ஆப் கதர் என்ற நிறுவனத்தை கமல்ஹாசன் தொடங்கியிருந்தார். இந்நிறுவனத்தின் விளம்பரம், விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக அவர்அமெரிக்கா சென்றிருப்பதாக கட்சி வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE