சனாதன தர்மத்தை ஒருபோதும் அழிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி

By KU BUREAU

நாகர்கோவில்: சனாதன தர்மத்தை ஒருபோதும் அழிக்க முடியாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலையில் அமைந்துள்ள ஹிந்து தர்ம வித்யா பீடத்தின் 41-வது சமய வகுப்பு மாநாடு மற்றும் 35-வது பட்டமளிப்பு விழாதிருவட்டாறில் நேற்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வித்யா பூஷன் பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

பலவீனப்படுத்த முயற்சி... இந்து தர்மம்தான் பாரதத்தை உருவாக்கியுள்ளது. பாரதம், இந்து தர்மம் இரண்டையும் பிரிக்க முடியாது. ஏறத்தாழ 1,000 ஆண்டுகளாக அயலார் ஆட்சியில் நமது தர்மத்தை அழிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அவற்றை எல்லாம் கடந்து வந்துள்ளோம்.

நமது தர்மம் என்றுமே அழிக்கமுடியாதது. அதை பலவீனப்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், இதில் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். சனாதன தர்மம் என்பது எளிமையானது. ஆனால், வெளியே தெரியும்போது சிக்கலானதாகத் தெரிகிறது.ஏனென்றால் பல கடவுள்களை வழிபடுகிறோம். இதை பயன்படுத்திக் கொண்டு, சிலர் குழப்பத்தை உருவாக்க முயற்சிசெய்கின்றனர். சனாதன தர்மத்தை பற்றி எல்லோருக்கும் தெரிய வேண்டும். எல்லோருக்கும் விளக்கம் கூறும்அளவுக்கு தயாராக வேண்டும். குறிப்பாக, இளைய சமுதாயத்தினர் இதுகுறித்து விளக்கம் அளிக்கத் தயாராக வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE