தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு தனி இடம் கோரி மனு; 2 வாரத்தில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By KU BUREAU

சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னைதீவுத்திடலில் பட்டாசு விற்ப னைக்கு தனி இடம் ஒதுக்க கோரி விற்பனையாளர்கள் நல சங்கம் அளித்த மனுவை 2 வாரங்களில் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, விற்பனை நடந்து வருகிறது. வரும்அக்டோபர் 31-ம் தேதி தீபாவளிகொண்டாடப்பட உள்ள நிலை யில், தீவுத்திடலில் கடை அமைப்பது தொடர்பாக பட்டாசு விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னுரிமை சலுகை: சென்னை பாரிமுனை பந்தர் தெரு, ஆண்டர்சன் தெரு, என்எஸ்சிபோஸ் சாலை உள்ளிட்ட 7 இடங்களில் பட்டாசு கடை நடத்துவோருக்கு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை கடைகள் ஒதுக்கும்போது முன்னுரிமையுடன் சலுகைகள் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கடந்த 2006-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் டெண்டர் மூலமாக கடைகளை ஒதுக்கி வருகிறது. இதில், தகுதி இல்லாத பலருக்கும் கடைகள் ஒதுக்கப்படுவதால், ஏற்கெனவே பட்டாசு தொழில் நடத்திவரும் விற்பனையாளர்கள் பாதிக் கப்படுகின்றனர்.

எனவே, சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நல சங்க உறுப்பினர்களுக்கு தீவுத்திடலில் தனி இடம், அல்லது வேறு இடம் ஒதுக்க வேண்டும்.

டெண்டருக்கு தடை: இதுதொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் மனு கொடுத்தும் பதில் இல்லை. எனவே, எங்களது மனுவை பரிசீலிக்கும் வரை, தீவுத்திடலில் பட்டாசு கடை ஒதுக்கீடு தொடர்பான டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, இதுதொடர்பாக பட்டாசு விற்பனையாளர்கள் நல சங்கம் கொடுத்த மனுவை தமிழக அரசு, சுற்றுலா வளர்ச்சி கழகம் தரப்பு 2 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE