அவதூறு வழக்கில் ஆஜராவதற்கு பழனிசாமிக்கு விலக்களிக்க ஆட்சேபம் இல்லை: திமுக எம்.பி. தயாநிதி மாறன் பதில் மனு

By KU BUREAU

சென்னை: ‘நான் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு கோரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறும் காரணங்கள் நியாயமானதாக இருந்தால் எனக்கு ஆட்சேபனை இல்லை’ என மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் சிறப்பு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய சென்னைதொகுதி எம்.பி.யாக பதவி வகித்ததயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என குற்றம் சாட்டினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், பழனிசாமிக்கு எதிராகஅவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். எனது தொகுதி மேம்பாட்டுநிதியில் இருந்து 95 சதவீதத்தை தொகுதிக்காக செலவிட்டுள்ளேன் எனக்கூறி பட்டியல் வெளியிட்டி ருந்தார்.

இந்த அவதூறு வழக்கு, எம்.பி. எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பழனிசாமி நேரில் ஆஜரானார். அப்போது இந்த வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரி மனு தாக் கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாநிதி மாறன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில், “இந்த அவதூறு வழக்குவிசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் வயது மூப்பு மற்றும் மருத்துவகாரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது அந்த கோரிக்கை நியாயமானதுதான் என நீதிமன்றம் கருதினால், நேரில் ஆஜராவதிலிருந்து அவருக்கு விலக்கு அளிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என அதில் கூறியிருந்தார். அதையடுத்து விசாரணையை செப்.25-க்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE