சிட்டிங் எம்பி-க்கள் 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு... பரபரக்கும் திமுக வேட்பாளர் பட்டியல்!

By காமதேனு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை வெளியிடவிருக்கும் நிலையில் திமுகவின் உத்தேச வேட்பாளர் பட்டியலும் வெளியாகி வருகின்றன.

அண்ணா அறிவாலயம்

மக்களவைத் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு சம்பிரதாயங்களை சுமுகமாக முடித்து தேர்தல் களத்தில் முன்னணியில் நிற்கிறது திமுக. அடுத்த கட்டமாக திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் தேர்வு செய்து முடித்திருக்கிறது. வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்வது குறித்து கட்சியின் தலைமை நிர்வாகிகளிடம் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

திமுக கூட்டணி

இதனிடையே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள், புதுச்சேரி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் அனைத்துமே தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் வேகம்காட்டி வருகின்றன.

டி..ஆர்.பாலு

இந்த நிலையில், திமுக சார்பில் 21 தொகுதிகளில் களமிறங்கப் போகும் வேட்பாளர்கள் பற்றிய உத்தேசப்பட்டியல் தற்போது கசிந்துள்ளது. அதில், தற்போது எம்பி-க்களாக உள்ள கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், செல்வம், அண்ணாதுரை, கதிர் ஆனந்த், கனிமொழி, பழனிமாணிக்கம், சண்முகசுந்தரம், கவுதம சிகாமணி, செந்தில்குமார், ஆ.ராசா ஆகிய 14 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் தவிர, கோவையில் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரன், ஈரோட்டில் திமுக இளைஞர் அணியின் துணைச் செயலாளர் பிரகாஷ், சேலத்தில் செல்வகணபதி அல்லது உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற செயலாளராக இருந்த பி.கே.பாபு, தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் வேட்பாளராக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


ஷாக்... நடுக்கடலில் விழுந்து நொறுங்கிய இந்திய கடற்படை விமானம்!

விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை... பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

நள்ளிரவு ஒரு மணிக்கு பொங்கல்... 50 ஆடுகளை வெட்டி 3,000 ஆண்களுக்கு விருந்து!

பிரேமலதா விஜயகாந்த் மீது பாய்ந்தது வழக்கு...தேர்தல் விதிமுறை மீறியதாக அதிரடி!

வனவிலங்குகளுடன் செல்ஃபி எடுக்கப் போறீங்களா?... 7 ஆண்டு சிறை உறுதி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE