அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு, வேட்பாளர்களின் வேட்புமனு படிவத்தில் கையெழுத்திடும் அங்கீகாரத்தை வழங்க கோரி தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு அளித்துள்ளார்.
அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் போன்றவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தர தடை விதித்துள்ளது. இந்நிலையில், அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை அங்கீகரிக்கும் ஏ, பி படிவங்களில் கையெழுத்திட ஓபிஎஸ்சுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர்களின் சின்னம் குறித்த படிவத்தில் கையெழுத்திட ஓபிஎஸ்சுக்கு அனுமதி வழங்காவிட்டால் இரட்டை இலை சின்னத்தை நிறுத்தி வைத்து இரண்டு தரப்புக்கும் பொதுவான சின்னங்களை வழங்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
திருமணம் செய்யலைன்னா தற்கொலை செய்துப்பேன்... இளைஞரை மிரட்டிய பெண் கைது!
தொழுகை நடத்திய வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்: 2 பேர் கைது!
அமெரிக்காவால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்... ரஷ்யா அதிபர் புதின் எச்சரிக்கை!
பார்ட்டிகளில் பாம்பு விஷ போதை... பகீர் கிளப்பிய பிரபல யூடியூபர்!