சென்னை: பாஜக மாநில முன்னாள் தலைவர்தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் நடைபெற்ற திமுகவின் பவள விழா கொண்டாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பேச்சு, அவர்தமிழகத்தின் உண்மை நிலையைஅறிந்து பேசுகிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், உழவர்கள், நெசவாளர்கள் என விளிம்புநிலை மக்களை கல்வி, வேலைவாய்ப்பில் உன்னத நிலைக்கு உயர்த்தி உள்ளோம் என்று கூறியுள்ளார்.
ஆனால், அவர்கள் எவ்விதமுன்னேற்றமும் இல்லாமல் இன்னமும் விளிம்பு நிலையிலேயேதான் இருக்கிறார்கள். அவர்களின் இந்த நிலையை பயன்படுத்தித்தான் ஒவ்வொரு தேர்தலின்போதும் திமுக கொடுப்பதைகொடுத்து, வாக்குகளைப் பெறுகிறது. ஜனநாயகத்துக்கு உயிர்கொடுக்க வேண்டுமானால், திமுகவுக்கு முடிவுரை எழுதியாக வேண்டும். இதற்கான பொறுப்பு மக்களின் கைகளில்தான் உள்ளது.
தொடர் வரி விதிப்பு, திறமையற்ற நிர்வாகம், வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, ஒவ்வொரு துறையிலும் அதிகரித்திருக்கும் ஊழல் போன்றவற்றால் தமிழக மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். வரும் தேர்தல் திமுகவுக்கு முடிவுரை எழுதும் தேர்தலாக நிச்சயம் இருக்கும்
» மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ செப்.19, 2024
» தொழில் முனைவோரான 33,000 இளைஞர்கள்: அசோசெம் மாநாட்டில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்