மும்பையில் நாளை இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்... முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்!

By காமதேனு

இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(மார்ச் 17) காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார்.

இந்தியா கூட்டணி

மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக உள்ளிட்டு 25 மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் புதிய அமைப்பினை உருவாக்கியுள்ளன. தேர்தல் நெருங்க நெருக்க இக்கூட்டணி கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து பீகார் முதலமைச்சரான நிதீஷ்குமார் விலகினார் . இதைத்தொடர்ந்து மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்தார் . இதனால் இந்தியா கூட்டணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் இந்தியா கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பைக்கு நாளை செல்கிறா். இதன்படி நாளை காலை மும்பை செல்லும் முதல்வர் ஸ்டாலின், பொதுக் கூட்டம் முடிந்து அன்று இரவே சென்னை திரும்புகிறா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE