கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் என்சிசி மாணவர் அணிவகுப்பு நடையில் செல்ல முயன்றபோது அவரது கை முதல்வரின் கண்ணில் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில், மாநில அமைச்சர், முதல்வர் தொகுதிகளில் ஆய்வு செய்யும் நவ கேரள சதாஸ் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், என்சிசி மாணவர்கள் மேடைக்கு வந்து முதல்வருக்கு சல்யூட் அடித்து புத்தகம் வழங்கி செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது ஒரு என்சிசி மாணவர், முதல்வர் பினராயி விஜயனுக்கு புத்தகம் வழங்கிவிட்டு அவருக்கை சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் அந்த மாணவர் என்சிசி அணிவகுப்பு முறையில் கைகளை அசைத்து நடந்து செல்ல முயன்றபோது மாணவரின் கை முதல்வர் பினராயி விஜயனின் கண்ணில் குத்தியது.
இதனை கவனித்த மாணவரும் ஓடிச்சென்று முதல்வரிடம் வருத்தம் தெரிவித்து ஆசுவாசப்படுத்தினார். மாணவரின் கை முதல்வரின் கண்ணில் பட்டபோது அவர் கண்ணாடி அணிந்திருந்தார். அதனைக் கழற்றிவிட்டு, பிறகு கைகளால் கண்களில் சிறிது தேய்த்தார். அருகில் இருந்த அரசு அதிகாரிகளும் முதல்வருக்கு உதவிசெய்தனர். அதன் பிறகு கைக்குட்டையை கண்ணில் வைத்திருந்தவாறே அந்த நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி பங்கேற்று பேசினார்.
அரசு திட்ட நிகழ்ச்சியில் என்சிசி மாணவரின் கை, எதிர்பாராதவிதமாக முதல்வரின் கண்ணில் குத்திய சம்பவம் மேடையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் வாசிக்கலாமே...
பகீர்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை... சீனாவில் வேகமெடுக்கும் புதிய வகை நோய்!
கனமழை... பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!
தொழிலதிபரைக் கடத்திய 2 பேர் என்கவுன்டர்!
சென்னை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை: நீதிமன்றம் அதிரடி!