பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக பிறந்தநாள் வாழ்த்து!

By துரை விஜயராஜ்

சென்னை: பிரதமர் மோடி நாளை (செப்.17) தனது 74-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறார். இதையடுத்து, அவருக்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் தலைவனாக, ஒவ்வொரு வீட்டிலும் நம்பிக்கையின் விளக்காகவும், வழிகாட்டும் ஒளியாகவும், ஒளிரும் நட்சத்திரமாகவும் பிரதமர் மோடி மாறிவிட்டார். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீதான மோடியின் அன்பு, இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தின் மீதான அவரின் தேச பக்திக்கும், அர்ப்பணிப்புக்கும் சான்றாகும்.

தமிழ் மொழியின் மகத்துவத்தை உலக அரங்கில் தொடர்ந்து வெளிப்படுத்தி, தமிழ் கவிதைகள் மற்றும் வசனங்களை மேற்கோள் காட்டி, உலகத் தமிழர்களை உற்சாகப்படுத்துகிறார். நாடாளுமன்றம் முதல் ஐக்கிய நாடுகள் சபை வரை, திருக்குறள், பாரதியார், அவ்வையார் வசனங்களை மேற்கோள் காட்டி தமிழ் மொழியின் பெருமையை எடுத்துரைத்திருக்கிறார். மோடியின் மேற்கோள்கள் யாவும் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கிறது.

இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மோடியின் தன்னலமற்ற அர்ப்பணிப்புக்கு தாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பிரதமர் மோடியின் எண்ணற்ற நலத்திட்டங்கள் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

தேச பக்தி, கருணை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உணர்வை வெளிப்படுத்தும் மோடியை போன்ற ஒரு தலைவரைக் கொண்டிருப்பதில் தமிழக பாஜக பெருமை கொள்கிறது. பிரதமர் மோடியின் 74வது பிறந்த நாளில் தமிழக மக்கள் சார்பாக பாஜக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE