நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை... மியாட் மருத்துவமனை அறிக்கை!

By காமதேனு

நடிகர் விஜயகாந்த் உடல்நிலை, கடந்த 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்றும், இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் விஜயகாந்துக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது தொண்டர்களை பதற்றமடைய செய்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நவம்பர் 18ம் தேதி இரவு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ‘’விஜயகாந்த் அவர்களின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்ட போதிலும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல் நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’’ என்று மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


சென்னையில் பரபரப்பு... கத்தை, கத்தையாக சிக்கிய ரூ.1.25 கோடி ஹவாலா பணம்:

ஈபிஎஸ் மீது ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

பெங்களூருவைக் கலக்கிய குழந்தைக் கடத்தும் கும்பல்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 பேர் கைது!

த்ரிஷாவிடம் 'மரணித்து விடு' என்று தான் சொன்னேன்: மன்சூர் அலிகானின் புது சர்ச்சை!

மின்சாரம் தாக்கி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பலி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE