சேரி என கூறி தலித் மக்களை நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு இழிவுபடுத்திவிட்டார் என கூறி தமிழக காங்கிரஸார் குஷ்பு வீட்டருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குஷ்பு புகைப்படத்தின் மீது சாணி வீசியும், துடைப்பத்தால் அடித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு, "உங்களைப் போலச் சேரி மொழியில் என்னால் பேச முடியாது. மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைக் கண்களைத் திறந்து பாருங்கள்" என்று ட்வீட் செய்திருந்தார். சேரி என்ற வார்த்தை சர்ச்சையானது.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் காங்கிரஸார் சாந்தோம் பிரதான சாலையில் இருக்கும் குஷ்பூ வீட்டின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சேரி என்கிற வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க கோரி குஷ்புவின் உருவ பொம்மையின் மீது மாட்டு சாணத்தை வீசியும், துடைப்பத்தால் அடித்தும் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன் குமார், ‘’பட்டியல் இன மக்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் குஷ்பூ பேசியுள்ளார். குஷ்புவின் வார்த்தைகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், வி.பி.துரைசாமியின் ஆதரிக்கிறார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் இருந்து இதுவரை அவர் வெளியிட்ட ட்வீட் நீக்கப்படாமல் உள்ளது.
மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது ட்வீட்டை நீக்க வேண்டும். இல்லையெனில் காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். குஷ்புவின் செயலுக்கு நடிகர் சங்கத்திடம் மனு அளிப்போம்’’ என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
HBD YamiGautam | சர்ச்சைகளை சாதனைகளாக்கிய பஞ்சாபி பொண்ணு!
கனமழை... புயல்... 1.5 லட்சம் வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு!
ராணுவவீரர் மீது கொலைவெறி தாக்குதல்; உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!
ஐஐடி மாணவர் தற்கொலையில் திடீர் திருப்பம்: பேராசிரியர் பணியிடை நீக்கம்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 9.13 லட்சம் விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் தகவல்!