தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு

By KU BUREAU

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை நேற்று ரூ.320 உயர்ந்து, பவுன் ரூ.54,920-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப் படுகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.960 அதிகரித்தது.

நேற்று ஒரு பவுன் ரூ.320 உயர்ந்து, ரூ.54,920-க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,865-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.58,560-க்கு விற்கப்பட்டது. இதேபோல், வெள்ளியும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து கிராம் ரூ.97-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 ஆயிரம் உயர்ந்து ரூ.97,000-க்கும் விற்பனையானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE