பழநி: ஆதார் அட்டையை செப்.14-ம் தேதிக்குப் பிறகு புதுப்பிக்க முடியாது என்ற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என, திண்டுக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெ.பரமசிவம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: ‘ஆதார் அட்டையை புதுப்பிக்காதவர்கள் நாளைக்குள் (செப்.14) புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்குப் பின் பதிவு செய்ய இயலாது என்றும் பொய்யான வதந்தியை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம்.
ஆதார் தொடர்பான சேவைகளை எப்போது வேண்டுமானாலும் பெறலாம். அதற்கு கால நிர்ணயம் கிடையாது. எனவே, பொதுமக்கள் தபால் நிலையங்களுக்கு திரண்டு வந்து சிரமப்பட வேண்டாம்’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
» ‘கேள்வி கேட்டால் அவமரியாதையுடன் நடத்துகிறார்கள்’ - அன்னபூர்ணா விவகாரத்தில் ராகுல் காந்தி ஆவேசம்!