திருச்சி: திருச்சி அருகே பலத்த காற்று வீசியதில் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்து விழுந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். திருச்சி மலைக்கோட்டை பணிமனையில் இருந்து இயக்கப்படும் நகரப் பேருந்து ஒன்று நேற்று காலை சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நெய்குப்பை கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.
லால்குடி அருகே சென்றபோது பலத்த காற்று வீசியது. அப்போது, பேருந்தின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென பறந்து கீழே விழுந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதையடுத்து பேருந்து ஓட்டுநரும், நடத்துரும் பேருந்தை ஓரமாக நிறுத்தி பயணிகளை பத்திரமாக கீழே இறக்கினர். பின்னர், போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, மாற்றுப் பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதன்பின், மேற்கூரையை அப்பகுதி மக்கள் சிலர் உதவியுடன் தற்காலிகமாக சரி செய்து பேருந்தை பணிமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
» வியட்நாமை சூறையாடிய யாகி புயல்: கடும் வெள்ளத்தில் சிக்கி 197 பேர் பலி; 128 பேர் மாயம்
» மூளைச்சாவு அடைந்த திண்டுக்கல் சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்