மதுரையில் ரூ.1.08 லட்சம் மதிப்புள்ள விதைகளை விற்க தடை: ஆய்வில் அதிரடி

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: மதுரை திருமங்கலத்திலுள்ள உள்ள விதை விற்பனை நிலையங்களில் இன்று ஆய்வு செய்த சென்னை விதை ஆய்வு இணை இயக்குநர் ரவி ரூ.1.08 லட்சம் மதிப்புள்ள விதைகள் விற்பனை செய்ய தடை விதித்தார்.

மதுரை மாவட்டத்தில் சென்னை விதை ஆய்வு இணை இயக்குநர் ரவி இன்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறையின் விதை ஆய்வுப் பணிகளை ஆய்வு செய்தார். இதில் திருமங்கலம், கப்பலூர், நெல்பேட்டை பகுதியிலுள்ள தனியார் விதை சுத்திகரிப்பு நிலையம் தனியார், அரசு சார் மற்றும் அரசு விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தார்.

இதில் திருமங்கலத்திலுள்ள தனியார் விதை விற்பனை நிலையத்தில் உரிய ஆவணங்கள் பராமரிக்கப்படாததால் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் மதிப்புள்ள 270 கிலோ வீரிய மக்காச்சோள விதைகள் விற்பனை செய்ய தடை விதித்தார். அப்போது மதுரை விதை ஆய்வு துணை இயக்குநர் சு.வாசுகி, விதை ஆய்வாளர்கள் செல்வகுமார் (தொழில்நுட்பம், சென்னை), ஆர். அகிலா (மதுரை திருப்பரங்குன்றம்), மோ.கோபி (திருமங்கலம்) ஆகியோர் உடனிருந்தனர். பின்னர், மதுரையில் விதை ஆய்வாளர்கள் விதைச் சான்றளிப்பு அலுவலர்கள், விதைப் பரிசோதனை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி, விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE