இன்று மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!

By காமதேனு

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம், பிபிடி என மருத்துவம் சார்ந்த படிப்புக்களுக்கான பொதுப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று இணைய வழியில் தொடங்கியது.

தமிழ்நாட்டில் எம் பி பி எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் தவிர பி.பார்ம், பி.பி.டி, பி.எஸ்.சி நர்சிங் உட்பட 19 படிப்புகள் உள்ளன. இதற்கு ஏராளமான மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று இணைய வழியில் தொடங்கியது.

தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவ, மாணவிகள் இன்று காலை 10 மணி முதல் 18ம் தேதி மாலை 5 மணி வரை கலந்து கொண்டு கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21-ம் தேதி தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இதற்கான ஒதுக்கீடு படிவத்தை ஆகஸ்ட் 22ம் தேதி இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருப்பமுள்ள மாணவர்கள் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களை தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE