விதிமீறலில் ஈடுபட்டதாக போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போலீஸார்

By KU BUREAU

சென்னை: விதிமீறல்களில் ஈடுபட்டதாக அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர். கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரில் அரசு பேருந்துகளை நிறுத்தி அங்கு பயணிகளை இறக்கிச் செல்வதால், பயணிகள் சாலையைக் கடந்து மிகவும் ஆபத்தான முறையில் பேருந்து முனையத்துக்கு சென்று வந்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸாருக்கு பொதுமக்கள் தொடர்ந்து புகார்தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரில் ஜிஎஸ்டி சாலை ஓரம் நிறுத்தி பயணிகளை நேற்று இறக்கி விட்டனர். அங்கு கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஹேமந்த் குமார் தலைமையில், போக்குவரத்து போலீஸார் இருந்தனர்.

அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக அங்கு நிறுத்தி இருந்த அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர். இவ்வாறு25 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பேருந்து நிறுத்தம்இல்லாத இடத்தில் நிறுத்துவது, அங்கு பயணிகளை இறக்குவதுபோன்ற விதிமீறல் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தினங்களுக்கு முன், நெல்லை மாவட்டத்தில் அரசு பேருந்தில் காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்காத விவகாரத்தில், பேருந்துநடத்துநர் கண்டிப்புடன் நடந்துகொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதன் எதிரொலியாக இதுபோன்றுவிதிமீறல் தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதி களில் அரசு பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE