குரங்கம்மை பரிசோதனை, சிகிச்சைக்கு தனி வார்டுகள் தயார்: சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் குரங்கம்மைக்கான பரிசோதனை வசதி, சிகிச்சை அளிக்க படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நேற்று சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வெளிநாட்டில் இருந்து வந்த பயணி ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த நபரின் விவரத்தை மத்திய அரசு ரகசியமாக வைத்துள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கம்மைக்கான பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகள் மற்றும்தனி அறைகள் தொடங்கி வைக்கப்பட்டு, வெளிநாடு பயணிகள்தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். விழிப்புணர்வு பதாகைகள் விமான நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சிகிஆபெ விஸ்வநாதன் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில் குரங்கம்மைக்கென்று 10 படுக்கைகள் கொண்ட தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 22 ஆய்வகங்களுக்கு குரங்கம்மை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு மத்திய அரசுஅனுமதி அளித்துள்ளது. அதில்ஒன்று சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் உள்ளது. அதற்கு தேவையான வேதிப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில்குரங்கம்மை பாதிப்புகள் கண்டறியப்படவில்லை.

தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் கொசுக்களை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் உள்ளாட்சிஅமைப்புகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு வைரஸ் மாதிரிகள் குறித்து ஆய்வு செய்ய புதிய ஆய்வகம், சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையில் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வகம் விரைவில்செயல்படவுள்ளது. இதற்கானவேதிப்பொருட்கள் அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகத்தில் டெங்கு பாதிப்புகட்டுக்குள் இருப்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE