மக்களவைத் தேர்தல்... தவெக நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு!

By காமதேனு

மாற்றுக் கட்சியினருடைய பரப்புரை, கூட்டங்களுக்குச் செல்லக் கூடாது என விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்

தேர்தல் தேதி விரைவில் அறிவிக்க இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் சில முக்கிய உத்தரவை தனது கட்சி நிர்வாகிகளுக்குப் பிறப்பித்துள்ளார். கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது கட்சியை அறிவித்தார் விஜய்.

வரும் மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும், வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு எனவும் அவர் கூறினார். இதனை ஒட்டியே அரசியல் செயல்பாடுகளை நகர்த்தி வருகிறார் விஜய். தனது கட்சி சார்பாக விரைவில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அதன் மூலம் இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க திட்டம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்

இந்த நிலையில், தனது கட்சி நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகளை விஜய் பிறப்பித்துள்ளார். அதில், ‘விரைவில் தேர்தல் தேதி அறிவிக்க இருக்கிறார்கள். அதற்கான பொதுக்கூட்டம், தேர்தல் பிரச்சாரம் போன்றவையும் சூடிபிடிக்கும். அதனால், நமது கட்சியைச் சேர்ந்தவர்கள் மாற்றுக் கட்சியினரது பரப்புரை, பொதுக்கூட்டங்களுக்குச் செல்லக் கூடாது. உறுப்பினர்கள் சேர்க்கையில் முழு கவனம் செலுத்த வேண்டும். மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். 2026 நமது இலக்கு’ எனக் கூறியுள்ளார்.

தேர்தல் சமயத்தில் தவெக தலைவர் விஜய் உத்தரவை நிர்வாகிகளும், கழகத்தை சேர்ந்தவர்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி... 7 மாநிலங்களில் NIA தீவிர சோதனை!

எம்ஜிஆர் பிரச்சாரத்தையும் மீறி அதிமுக வேட்பாளரை தோற்கடித்த இரட்டை இலை... 1977 தேர்தல் சுவாரஸ்யம்!

அதிரடி... ஸ்பாட்டிஃபை வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ16,500 கோடி அபராதம்!

காதல் மனைவி தற்கொலை... வேதனையில் ஆசிட் குடித்து கணவர் உயிரை விட்ட பரிதாபம்!

அதிர வைத்த 'ஆபரேஷன் லோட்டஸ்'... காங்கிரஸ் கூண்டோடு காலி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE