மத்திய தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய கோரி வீடு வீடாக பிரச்சார இயக்கம்: ஏஐசிசிடியு கூட்டத்தில் முடிவு

By பெ.ஜேம்ஸ் குமார்

வண்டலூர்: மத்திய தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய கோரி 15.09.2024 முதல் 15.10.2024 வரை வீடுவீடாக பிரச்சார இயக்கம் நடத்த வண்டலூரில் நடைபெற்ற அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வண்டலூரில் ஞாயிறு (செப். 08) மாலை நடந்த அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில் (Aicctu) சென்னை பெருநகர மாவட்ட கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட துணை தலைவர் மு.தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில சிறப்பு தலைவர் சொ.இரணியப்பன் மாநில செயலாளர் உ.அதியமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழகம் முழுவதும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், புதிய அறிவிப்பு பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த கோரி வரும் 15.09.2024 முதல் 15.10.2024 வரை வீடுவீடாக சென்று ஒரு மாத பிரச்சார இயக்கம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE