அதிமுக கொடிதான் பயன்படுத்தக்கூடாது... ஆனால் இப்படி செய்யலாம்! அசர வைத்த ஓபிஎஸ்

By காமதேனு

அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், அதிமுக கொடி வண்ணங்களை தனது காரின் முகப்பில் இடம் பெற செய்திருந்தது அதிமுகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இபிஎஸ் அருகில் ஓபிஎஸ்

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாத மசோதாக்கள் தொடர்பாக தனித் தீர்மானங்களும் அவையில் நிறைவேற்றப்பட்டன. சட்டமன்ற விவகாரம் இப்படி ஒருபுறம் இருக்க, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்துவது தொடர்பாக வழக்கும் நடந்து வருவதால் சட்டமன்றத்துக்கு அவர் என்ன உடை அணிந்து வருவார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.

அந்த வகையில் சட்டமன்றத்துக்கு காரில் வந்திறங்கிய ஓபிஎஸ், வெள்ளைச் சட்டை அணிந்து வந்திருந்தார். ஆனால் ஒரு ட்விஸ்ட்டாக வழக்கமான வெள்ளை வேட்டிக்குப் பதிலாக காவி நிற வேட்டி அணிந்து வந்திருந்தார். அதேபோல வழக்கமான அதிமுக கொடியையும் தனது காரில் அவர் பயன்படுத்தவில்லை. மாறாக வெள்ளை, சிவப்பு, கறுப்பு வண்ணங்களை காரின் முகப்பில் இடம்பெறச் செய்திருந்தார்.

அதேவேளையில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் மூவரும் அதிமுக வண்ணம் கொண்ட வேட்டிகளை அணிந்து வந்திருந்தனர். அதேபோல கார்களில் அதிமுக கொடியை அவர்கள் பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் கமல் பன்றியை வளர்கிறார்... பிரபல பாடகி ஆவேசம்!

சத்தமில்லாமல் நடந்த மகனின் பட பூஜை... கண்டுகொள்ளாத விஜய்!

பகீர் வீடியோ... 40 தொழிலாளர்களின் உயிர் போராட்டம்... மீட்பு பணிகள் நிறுத்தி வைப்பு!

நாளை உலகக் கோப்பை பைனல்... லட்சங்களில் எகிறிய தங்கும் விடுதி வாடகை!

பரபரப்பு... காங்கிரஸ் வேட்பாளருக்கு விழுந்த செருப்படி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE