7.5% ஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் மாணவிகள்: எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவிப்பு!

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: 7.5 சதவிகித இடஒதுக்கீடு முறையில் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கான வாய்ப்பு பெற்ற மாணவிகள் தமிழக எதிர்க் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அவர்களுக்கு கேடயங்களை வழங்கி எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சேலத்தில் இருந்து ரயில் மூலம் திருநெல்வேலிக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி. ரயில் நிலையத்தில் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைதொடர்ந்து திருநெல்வேலில் உள்ள தங்கும் விடுதியில் இருந்த அவரை, கடந்த கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வு மூலம் 7.5 சதவிகிதம் ஒதுக்கீட்டு முறையில் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப் பெற்ற 6 மாணவிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அந்த மாணவிகளுக்கு சால்வை அணிவித்து, கேடயம் வழங்கி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார். முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE