கோவையில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா: மாவட்ட ஆட்சியர் மரியாதை 

By இல.ராஜகோபால்

கோவை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு கோவை வ.உ.சி.மைதானத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நம் நாட்டின் விடுதலைக்கு தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானர் வ.உ.சிதம்பரனார் என்றால் அது மிகையில்லை. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அரசியல் ரீதியாக மட்டுமின்றி வணிகரீதியாகவும் வீழ்த்திடும் உயர்ந்த நோக்கத்தில் சுதேசி நேவிகேஷன் கம்பெனி என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய காரணத்தினாலே கப்பலோட்டிய தமிழன் என்ற பெயர் பெற்றார்.

தமிழக முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து கோவை வ.உ.சி மைதானத்தில் சிலை திறக்கப்பட்டுள்ளது. நம் தேசத்தின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்தும் அயராது பாடுபட்டும் தாய் நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்து மறைந்தும் மக்களின் மனங்களில் என்றும் நிறைந்துள்ள கப்பலோட்டியத் தமிழன் வ.உ. சிதம்பரனார் தியாகத்தை இளையதலைமுறையினரும் அறிந்து கொண்டு போற்ற வேண்டும்.

வ.உ. சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு கோவை வஉசி மைதானத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகர மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றி செல்வன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE