பொத்தேரி: ஆந்திர மாநிலம் செகந்திராபாத் பகுதியை சேர்ந்த கொண்டா ஸ்ரீனிவாச நிக்கில் (20), சென்னையை அடுத்த பொத்தேரியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி அதே பகுதியில் உள்ளபிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் பி.டெக் 4-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.
இவர் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு தாம்பரம் மாநகர போலீஸார் 1,000 பேர் ஒரே நேரத்தில் கஞ்சா சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாணவர் நிக்கில் உட்பட 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸார் விசாரித்தனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த நிக்கில் நேற்று முன் தினம் இரவு, தான் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழேகுதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிக்கில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
» பி.எஃப் அலுவலக ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சருடன் நாராயணன் திருப்பதி சந்திப்பு
» பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க தடை: நடிகர் சங்கம் தீர்மானம்